சீன அதிபர் ஸியைச் சந்தித்த மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ்

1 mins read
8a143ebb-e177-4fa2-ba39-c0e850fdb671
-

வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையே பதற்றம் நிலவும் வேளையில் அமெரிக்க செல்வந்தரும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், பெய்ஜிங்கில் நேற்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்தார். பெய்ஜிங்கில் இவ்வாண்டு தாம் சந்தித்த முதல் அமெரிக்க நண்பர் என்று பில்கேட்சிடம் அதிபர் ஸி கூறியதாக சீனாவின் அதிகாரபூர்வ ஊடகம் குறிப்பிட்டது. கொள்ளைநோய்க்குப் பிறகு எல்லைகள் திறக்கப்பட்டதிலிருந்து அமெரிக்காவின் உயர் வர்த்தகத் தலைவர்கள் சீனாவுக்கு வருகையளித்து வருகின்றனர். இவ்வாரயிறுதியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் சீனா செல்கிறார்.

படம்: சீனாவின் வெளியுறவு அமைச்சு