'தாதிகளின் உடை இறுக்கமாக உள்ளது'

2 mins read
8b17291c-e0ca-472e-b704-d9b5998c40f3
-

தாதிகளின் சீருடைகள் குறித்து கருத்து தெரிவித்த பாஸ் கட்சி எம்.பி.யை பலர் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

பெட்­டா­லிங் ஜெயா: வியா­ழன் அன்று நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய பாஸ் கட்­சி­யின் குவாந்­தான் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான வான் ரஸாலி வான் நோர், தாதி­க­ளின் உடை­கள் மிக­வும் இறுக்­க­மாக உள்­ளன என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்ள பல அமைப்­பு­கள் அவரை கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளன.

"தாதி­கள் அணி­யும் சீரு­டை­கள் செயல்­படும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன, அவர்­கள் தங்­கள் பணி­க­ளைச் செய்­வதை எளி­தாக்­கும் வகை­யில் உள்­ளன. அவர்­க­ளின் சீருடை இறுக்­க­மாக இல்லை. மேலும் சுகா­தார அமைச்சு நிர்­ண­யித்த வழி­காட் டல்கள் இதில் கடை­பி­டிக்­கப்­படுகின்­றன," என்று மலா­யன் தாதி­கள் சங்­கத்­தின் தலை­வர் நோர் ஹயாடி அப்­துல் ரஷித் கூறி­யுள்­ளார். தாதி­க­ளின் சீருடை விதி­கள் தெளி­வாக இருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

சீரு­டை­கள் மிக­வும் இறுக்­க­மாக இருக்­கக்­கூ­டாது, மேல் பகுதியின் நீளம் இடுப்­புக்கு கீழே மற்­றும் முழங்­கா­லுக்கு மேல் இருக்க வேண்­டும் என்­பது சுகா­தார அமைச்­சின் வழி­காட்­டு­த­லா­கும்.

"1980களில் தாதி­கள் அணிந்த பாவா­டை­யு­டன் ஒப்­பி­டும்­போது பெரிய மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் ஷரி­யா­வுக்கு ஏற்ப முழுக்­கால் சட்­டை­யாக மாற்­றப்­பட்­டது," என்று அவர் விளக்­கி­னார்.

திரு வான் ரஸா­லிக்கு அறிக்கை வாயி­லாக கண்­ட­னம் தெரி­வித்­துள்ள மலே­சிய மருத்­துவ சங்­கத்­தின் தலை­வர் டாக்­டர் முருகா ராஜ­துரை, "நமது சுகா தார அமைப்­பின் எதிர்­கா­லம் மற்­றும் நிலைத்­தன்மை குறித்து நாடு தழு­விய நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் தாதி­க­ளின் சீருடை பற்றி எம்.பி பேசு­கி­றார்," என்­றார்.