சோல்: தென் கொரியாவின் தலைநகர் சோலின் கிழக்கே உள்ள நெடுஞ்சாலையில் மூன்று பள்ளிப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாயின.
இதில் மாணவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பள்ளிப் பேருந்துகளில் 75 பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து நடந்ததாக கங்வான் மாநில தீயணைப்பு நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், விபத்தில் சிக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் இரண்டு மாணவர்கள் உட்பட மூன்று பேர் காப் பாற்றப்பட்டனர்.
இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
பேருந்து ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
காவல்துறையினர் விபத்துக்கான காரணத்தை அறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

