செய்திக்கொத்து

2 mins read
bd8611d5-a8bd-4c64-9838-861778f35932
-

21 ஆண்டுகளுக்குப் பிறகு

மீண்டும் இணைந்த தம்பதி

கோலாலம்பூர்: மலே­சி­யா­வில் மணவிலக்குப் பெற்ற ஒரு ஜோடி, 21 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் இணைந்துள்ளது. செல்வி ஹவா­ஸ­லி­னா­வும், 46,

திரு முஹ­மட் எஸ்­வானி அஹ­மட் நஸே­ரி­யும், 45, திரு ­ம­ணமாகி இரண்டு ஆண்­டு­கள் மட்டுமே மகிழ்ச்­சி­யாக இருந்­த­னர். அதன் பிறகு 2022ஆம் ஆண்­டில் அவர்­கள் மண­வி­லக்­குப் பெற்­ற­னர். இந்த நிலை­யில் இரு­வ­ரும் மீண்­டும் திரு­ம­ணம் செய்துகொண்­ட­னர்.

மண­வி­லக்­குப் பெற்ற பிறகு இரு­வ­ருக்­கும் இடையே எந்­த­வி­தத் தொடர்­பும் இல்லை. ஆனால் ஹவாஸ­லி­னா­வின் தாயார் மறைந்தபோது ஃபேஸ்புக்­கில் இரங்­கல் செய்­தியை முஹ­மட் எஸ்­வானி பதி­விட்­டி­ருந்­தார். நண்­பர் மூல­மாக தனது முன்­னாள் மனை­வி­யின் தாயார் மறைந்த செய்­தியை அவர் அறிந்­தி­ருந்­தார். இதை­ய­டுத்து மீண்­டும் இரு­வ­ருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.

"பல ஆண்­டு­கள் ஆன­தால் ஆரம்­பத்­தில் அவரை அடை­யா­ளம் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. முக­மெல்­லாம் மாறி­விட்­டது. ஃபேஸ்புக் நண்­பர்­க­ளாக இருக்கலாம் என்று அவர் கூறி­னார். அதி­லி­ருந்து நாங்­கள் இரு­வ­ரும் தொடர்ந்து எங்­க­ளு­டைய பழைய வாழ்க்­கை­யைப் பற்றி பேசி­னோம். பின்­னர் நாம் இரு­வ­ரும் ஒன்று சேர­லாம் என்று அவர் கூறி­னார். நான் அதை ஏற்­றுக்கொண்­டேன்," என்று ஹவா­ஸ­லினா கூறி­னார்.

இரண்டு பள்ளிகளுக்கு

பிரதமர் அன்வார் வாழ்த்து

உல­கின் சிறந்த பள்­ளி­க­ளின் பட்­டி­ய­லில் முதல் பத்து இடத்தில் இடம்பிடித்த இரண்டு பள்­ளி­களை பிர­த­மர் அன்­வார் இப்­ரா­ஹிம் பாராட்­டி­யுள்­ளார்.

2023ஆம் ஆண்­டுக்­கான உல­கின் தலைசிறந்த பத்து பள்­ளி­க­ளின் பட்­டி­ய­லில் செகோலா கெபாங்­சான் செரி பெர்­மாய் பள்ளி புத்­தாக்­கப் பிரி­வி­லும் சுகா­தா­ர­மான வாழ்க்கை முறை பிரி­வில் சிலாங்­கூ­ரின் பியு­எஸ்கே கான்­சோங் டராட் பள்­ளி­யும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­தச் சாத­னைக்­காக கல்­வி­யா­ளர்­களிடமும் பிள்ளை­களிடமும் தலைவணங்­கு­கி­றேன். எதிர்­கா­லத்­தில் மேலும் பல வெற்­றி­களை சாதிக்க வாழ்த்­து­கி­றேன் என்று அன்­வார் தமது டுவிட்­டர் செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

உல­கின் சிறந்த ஐந்து பள்­ளி­க­ளுக்­கான பரிசு போட்டியை 'டி4 எஜு­கே­ஷன்' என்ற அமைப்பு கடந்த ஆண்­டில் தொடங்­கி­யது. மாண­வர் வாழ்­வில் நல்ல விளை­வு­களை ஏற்­ப­டுத்தி சமூ­கத்­திற்­குப் பங்­காற்­றிய பள்­ளிக­ளுக்கு இவ்­வி­ருதுகள் வழங்­கப்­ப­டு­கின்றன.

மொத்­தம் $250,000 அமெ­ரிக்க டாலர் பரி­சுப் பணம் ஐந்து வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு பகிர்ந்து அளிக்­கப்­படும். சமூக ஒத்­து­ழைப்பு, சுற்­றுச்­சூ­ழல் நட­வ­டிக்கை, புத்­தாக்­கம், சவால்­களை சமா­ளித்­தல், ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கைக்கு ஆத­ரவு ஆகி­ய ஐந்து பிரி­வு­களின்கீழ் பரிசுகள் வழங்கப்படுகின்றன.