முகைதீன்: எங்கள் கூட்டணிக்கு 80% மலாய் வாக்காளர்களின் ஆதரவு உண்டு

முகைதீன்: எங்கள் கூட்டணிக்கு 80% மலாய் வாக்காளர்களின் ஆதரவு உண்டு

2 mins read
10093bf4-bb54-49b5-a8c8-e2983050d8ac
-

ஜார்ஜ்­ட­வுன்: பெரிக்­கத்­தான் நேஷ­னல் (பிஎன்) கூட்­ட­ணிக்கு மலே­சி­யா­வில் 80 விழுக்­காட்டு மலாய் வாக்­கா­ளர்­க­ளின் ஆத­ரவு உண்டு என்று அக்­கூட்­ட­ணி­யின் தலை­வர் முகை­தீன் யாசின் தெரி­வித்­துள்­ளார்.

மலாய் வாக்­கா­ளர்­களில் பெரும்பாலோர் தற்­போ­தைய பக்­கத்­தான் ஹரப்­பான்-பாரி­சான் நேஷ­னல் கூட்­ட­ணி­யின் ஒற்­றுமை அர­சாங்­கத்­தின் செயல்­பாடு­களில் அதி­ருப்தி கொண்­டுள்­ள­னர் என்­றும் திரு முகை­தீன் கூறி­னார்.

"ஒற்­றுமை அர­சாங்­கத்­தின் மீது நம்­பிக்கை இழந்­து­விட்ட அவர்­கள் தங்­கள் ஆத­ரவை 'பிஎன்' கூட்­டணிப் பக்­கம் திருப்­பி­யுள்­ள­னர். நாட்­டின் தற்­போ­தைய பொரு­ளி­யல் நிலை­யால் மக்­கள் வறு­மை­யால் அவ­திப்­ப­டு­கின்­ற­னர்," என்று அவர் பினாங்­கின் ஜார்ஜ்­ட­வுன் நக­ரில் 'பிஎன்' கூட்­ட­ணி­யின் தேர்­தல் நட­வ­டிக்­கை­க­ளைத் தொடங்கி வைத்­துப் பேசி­னார்.

"குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் மக்­களில் 40% மலாய்க்­கா­ரர்­கள். நடுத்­தர வரு­மா­னம் ஈட்­டும் மக்­களில் 40 விழுக்­காட்­டில் மலாய்க்­கா­ரர்­களும் மலாய்க்­கா­ரர் அல்­லா­த­வர்­களும் உள்­ள­னர். அவர்­கள் பல்­வேறு நிதிச் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு உதவ அர­சாங்­கம் என்ன செய்­துள்­ளது? ஒன்­று­மில்லை," என்­றும் திரு முகை­தீன் விவ­ரித்­தார்.

"வரும் மாநி­லத் தேர்­தல்­களில் சிலாங்­கூ­ரி­லும் 80% வாக்­கா­ளர்­க­ளின் ஆத­ரவு 'பிஎன்' கூட்­ட­ணிக்­குக் கிடைக்­கக்­கூ­டும். 15வது பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு 'பிஎன்' கூட்­ட­ணிக்கு அடித்­தள ஆத­ரவு அதி­க­ரித்­திருப்­பதை தம்­மால் உணர முடி­கிறது. ஒற்­றுமை அர­சாங்­கம் ஆட்சி அமைத்து ஆறு, ஏழு மாதங்­கள் ஆகி­யும் மக்­க­ளுக்கு உத­வும் திட்­டங்­கள் எது­வும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை," என்­றும் அவர் கூறி­னார்.

"தற்­போது தன் கைவ­சம் உள்ள கெடா, திரெங்­கானு, கிளந்­தான் ஆகிய மாநி­லங்­க­ளை­யும் சேர்த்து, பினாங்கு, சிலாங்­கூர், நெகிரி செம்­பி­லான் ஆகி­ய­வற்­றை­யும் கைப்­பற்ற 'பிஎன்' கூட்­டணி முனைப்­பு­டன் உள்­ளது. இப்­போ­தைக்கு பினாங்கு மாநி­லத்­தில் அறு­தி­ப்பெ­ரும்­பான்­மை­யு­டன் ஆட்­சி­யைப் பிடிக்க நோக்­கம் கொண்­டுள்­ளோம். ஆனால், அது அவ்­வ­ளவு எளி­தா­ன­தன்று," என்­றும் திரு முகை­தீன் தெரி­வித்­தார்.

கெடா, திரெங்­கானு, கிளந்­தான், பினாங்கு, சிலாங்­கூர், நெகிரி செம்­பி­லான் ஆகிய மாநி­லங்­க­ளின் சட்­ட­ச­பை­கள் இம்­மாத இறு­தி­யில் கலைக்­கப்­பட்­ட­வு­டன் ஆகஸ்ட் மாதத்­தில் அவற்­றின் தேர்­தல்­கள் ஒரே சம­யத்­தில் நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கைரி­யு­டன் முகை­தீன் சந்­திப்பு

இதற்­கி­டையே, முன்­னாள் சுகா­தார அமைச்­சர் கைரி ஜமாலு தீனை, திரு முகை­தீன் அடுத்த வாரம் சந்­திப்­பார். அப்­போது தமது பெர்­சத்து கட்­சி­யில் சேரும்­படி அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

"எங்­கள் கட்­சி­யி­லும் 'பிஎன்' கூட்­ட­ணி­யி­லும் சேர்ந்­து­கொள்ள அவ­ருக்கு முறை­யாக அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அதை ஏற்றுக்கொள்வதை அவ­ரது விருப்­பத்­துக்கு விட்­டு­விட்­டோம்," என்­றார் திரு முகை­தீன்.

திரு கைரி, பெர்­சத்து கட்­சி­யில் சேர்ந்­தால், அவ­ருக்கு அக்கட்­சி­யின் உச்ச மன்­றத்­தில் இட­ம் அளிக்­கப்­படும் என்றும் அது கட்சியைப் பலப்படுத்தும் என்றும் திரு முகைதீன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.