தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டனில் ஒரு வாரத்தில் மூன்று இந்திய வம்சாவளியினர் கொலை

1 mins read
107b006e-79a5-4335-8e9c-7a61df9dbdf0
மாண்ட அரவிந்த் சசிகுமார். படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா -

லண்டன்: இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது ஆடவர் ஒருவர் பிரிட்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இங்கிலாந்துத் தலைநகர் லண்டனின் கேம்பர்வேல் பகுதியில் இருக்கும் சவுத்ஹேம்ப்டன் வே வட்டாரத்தில் வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்தது.

கேரளாவைச் சேர்ந்த மற்றோர் ஆடவர் இவரைக் கொன்றதாக நம்பப்படுகிறது.

அரவிந்த் சசிகுமார் என்பவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது சலீம் கானைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சவுத்ஹேம்ப்டன் வேயில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனில் ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.