மலேசியாவில் வாகனப் போக்குவரத்துக்கு எதிராகச் சென்ற மோட்டார்சைக்கிள்; ஒருவர் மரணம்

மலேசியாவில் வாகனப் போக்குவரத்துக்கு எதிராகச் சென்ற மோட்டார்சைக்கிள்; ஒருவர் மரணம்

1 mins read
76405f17-0dd7-4290-8f2a-6af6d00c4731
சம்பவம் பதிவான காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள். படம்: தி ஸ்டார் -

கோலாலம்பூர்: மலேசியாவில் வாகனப் போக்குவரத்துக்கு எதிராக ஒருவர் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அவர் வேறொரு மோட்டார்சைக்கிளுடன் மோதியிருக்கிறார்.

அதனால் அந்த மோட்டார்சைக்கிள் சாலைத் தடுப்புடன் மோதி அதன் ஓட்டுநர் 30 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

மாண்ட ஓட்டுநர் 60 வயதைத் தாண்டியவர்.

விபத்தை ஏற்படுத்திய 41 வயது மோட்டார்சைக்கிளோட்டி காவல்துறையிடம் சரணடைந்தார்.

காஜாங்கில் உள்ள தனது வீட்டுக்கு அம்பாங்கிலிருந்துப் போகும்போது வழி தவறிப்போனதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அவர் காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார்.

இச்சம்பவம் புதன்கிழமையன்று நிகழ்ந்தது.

விபத்தை விளைவித்த மோட்டார்சைக்கிளோட்டி வெள்ளிக்கிழமையன்று காவல்துறையிடம் புகார் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்த தகவல்கள் தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் வெளியான பிறகுதான் அதைப் பற்றித் தனக்குத் தெரிந்ததாக அவர் கூறினார் என்று காவல்துறை இணை ஆணையர் முகம்மது அஸாம் தெரிவித்தார்.

மோட்டார்சைக்கிளோட்டிக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் தற்போதைக்கு அவர் கைதுசெய்யப்படவில்லை; ஆனால் அவரின் உடல்நிலை தேறிய பிறகு தகுந்த நடவடிக்கை எனுக்கப்படும் என்று திரு அஸாம் கூறினார்.

அவரின் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.