தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்சில் தீப்பிடித்துக்கொண்ட கப்பல்; அனைவரும் மீட்கப்பட்டனர்

1 mins read
f43f2864-5c60-43ae-9e9d-9073ac39178e
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் தீ மூண்டது. படம்: பிலிப்பீன்ஸ் கரையோரக் காவல்படை -

செபு: பிலிப்பீன்சின் போஹொல் மாநிலத்தின் தலைநகர் டாக்பிலாரானின் துறைமுகத்துக்கு அருகே பயணிகள் கப்பல் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது.

கப்பலில் இருந்த 132 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அவர்களில் 72 பேர் பயணிகள், எஞ்சிய 60 பேர் கப்பல் ஊழியர்கள்.

பயணிகளில் சிலர் நீந்தி துறைமுகத்தைச் சென்றடைந்ததாகவும் மற்றவர்களை மீனவர்கள், பிலிப்பீன்ஸ் கரையோரக் காவல்படையினர் உள்ளிட்டோர் மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்ந்தது.

அதிகாலை 3.55 மணியளவில் கப்பலின் இயந்திரப் பகுதியில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.