கோலாலம்பூர்: சாலையில் சென்றுகொண்டு இருந்த வாகனங்களுக்கு எதிர்த் திசையில் வந்த வாகனம் ஒன்றால் 60 வயது முதிய வரின் உயிர் பறிபோன சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை அம்பாங்கிலி ருந்து காஜாங் நோக்கி தமது மோட்டார் சைக்கி ளில் சென்றுகொண்டு இருந்து 41 வயது ஆடவர் வழியைத் தவறவிட்டதன் காரணமாக எதிர்த்திசை யில் வாகனத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக காவல்துறை யிடம் கூறினார். எதிரே வாகனம் வருவதை எதிர் பாராத 60 வயது மோட்டார் சைக்கிளோட்டி தடுமாறியதன் காரணமாக சாலை நடுவில் இருந்த தடுப்பின் மீது மோத நேரிட்டது. அதனால், சுமார் 30 மீட்டர் உயரத் துக்குத் தூக்கியடிக்கப்பட்ட அவர், கீழே விழுந்து மாண்டார். எதிர்த்திசை யில் வாகனத்தை ஓட்டிய ஆடவருக்கும் உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் கைது செய்யப்படவில்லை என அம்பாங் ஜெயா காவல் துறை துணை ஆணையர் முகம்மது ஆஸம் இஸ்மா யில் கூறினார். இருப்பி னும், அவரது மோட்டார் சைக்கிள் பறிக்கப்பட்டது.
எதிர்த்திசையில் வாகனம்: ஆடவர் மரணம்
1 mins read
-

