அத்துமீறி ஓடிவந்து மெஸ்ஸியை தழுவிய ரசிகருக்குத் தண்டனை
பெய்ஜிங்: சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் விளை யாட்டுத் திடலுக்குள் அத்துமீறி நுழைந்த
சீன காற்பந்து ரசிகருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, எந்த ஒரு காற்பந்துத் திடலுக்கும் அவர் ஓராண்டிற்குச் செல்ல முடியாது. 18 வயதான அந்த இளையரின் பெயர் டி என்று பெய்ஜிங் காவல்துறை அடையாளம் கண்டு உள்ளது. பெய்ஜிங்கி லுள்ள 'ஒர்க்கர்ஸ்' விளையாட்டுத் திடலில் கடந்த வியாழக்கிழமை அர்ஜெண்டினாவுக்கும் ஆஸ்திரேலியா வுக்கும் இடையிலான அனைத்துலக நட்புமுறை காற்பந்துப் போட்டி நடைபெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது அந்த இளையர் திடீரென பார்வையாளர் பகுதியி லிருந்து குதித்து திடலுக்குள் ஓடினார். அங்கிருந்த அர்ஜெண்டினா காற்பந்து பிரபலம் லயனல் மெஸ்ஸியை அவரே எதிர்பாராத நிலையில் அந்த ரசிகர் கட்டிப் பிடித்துத் தழுவினார். இளையரைத் துரத்தி வந்த பாது காவலர்கள் மெஸ்ஸியிடமிருந்து அவரைப் பிரித்து திடலுக்கு வெளியே தூக்கிச் சென்றனர். பெய்ஜிங் நகரமன்ற பொதுப் பாதுகாப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்ட அந்த இளையர் ஓராண்டு காலத்துக்குக் காற்பந்து விளையாட்டுத் திடலுக்குள் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. சாவோ யாங் காவல்துறை தனது சமூக ஊடகப் பக்கத்தில் இதனைத் தெரிவித்து உள்ளது. இந்தக் காற்பந்துப் போட்டியில் 2-0 என்னும் கோல் எண்ணிக்கையில் அர்ஜெண்டினா வெற்றிபெற்றது. போட்டி தொடங்கிய 80 வினாடிகளில் மெஸ்ஸி கோல் போட்டார். அனைத்துலக அளவில் அவரது அதிவேக கோல் இது.
இந்தோனீசிய பேட்மிண்டன்: இந்திய இணை வென்றது
ஜகார்த்தா: இந்தோனீசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தப் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இந்திய இணை, மலேசி யாவின் தலைசிறந்த ஆரோன் சியா-சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது. சிறப்பாக ஆடிய இந்திய இணை 21-17, 21-18 என்னும் நேர் செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் 'இந்தோனீசிய ஓபன் சூப்பர் 1000' தொடர் போட்டியில் வெற்றி பெறும் முதல் இந்தியர் கள் என்ற பெருமையையும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி பெற்றுள்ளனர்.

