மியன்மார் பங்கேற்கும் கூட்டம்: சில ஆசியான் நாடுகள் புறக்கணிப்பு

மியன்மார் பங்கேற்கும் கூட்டம்: சில ஆசியான் நாடுகள் புறக்கணிப்பு

1 mins read
d09ea93a-b838-4575-9ae4-250af45a29ab
-

பேங்­காக்: மியன்­மார் ராணுவ அர­சாங்­கத்­தின் வெளி­யு­றவு அமைச்­சரை அர­சி­யல் நெருக்­கடி குறித்து பேச அதி­கா­ர­பூர்­வ­மற்ற கூட்­டத்­திற்கு தாய்­லாந்து அர­சாங்­கம் அழைப்பு விடுத்­தி­ருந்­தது.

ஆனால், ஆசி­யா­னின் முக்­கிய நாடு­கள் அதில் பங்­கேற்­ப­தில் இருந்து விலகி இருக்க முடி­வு­செய்­துள்­ளன. இந்த விவ­கா­ரம் இப்­போது விமர்­ச­னத்­துக்கு ஆளா­கி­யுள்­ளது. இந்­தக் கூட்­டத்­தில் பங்­கேற்க இருப்­ப­தாக உறுதி அளித்­தி­ருக்­கும் ஒரே ஆசி­யான் நாடு கம்­போ­டியா.

முன்­ன­தாக, மியன்­மா­ரில் ராணு­வத்­தால் கவிழ்க்­கப்­பட்ட மக்­கள் அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளு­டன் அமை­திப் பேச்சு தொடங்­கு­வ­தற்­கான உடன்­பாட்டை ராணுவ அர­சாங்­கம் மதிக்­கத் தவ­றி­யது. அதன் கார­ண­மாக, ஆசி­யான் நடத்­தும் உயர்நிலைக் கூட்­டங்களில் மியன்­மார் ராணுவ ஜென­ரல்­கள் யாரும் பங்­கேற்­க ஆசி­யான் கூட்­ட­மைப்பு ஈராண்டு தடை விதித்­தது.

ஆயி­னும், தாய்­லாந்­தில் ராணு­வப் புரட்சி மூலம் ஆட்­சி­யைக் கவிழ்த்து பிர­த­மர் பொறுப்­பில் அமர்ந்­தி­ருக்­கும் பிர­யுத் சான் ஓச்சா, ஆசி­யா­னின் இதர வெளி­யு­றவு அமைச்­சர்­க­ளு­டன் கலந்­து­கொள்­ளு­மாறு மியன்­மார் ராணுவ அர­சாங்க வெளி­யு­றவு அமைச்­ச­ருக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தார்.

அந்­தக் கூட்­டத்தை நடத்­தும் பொறுப்பு, அண்­மை­யில் தாய்­லாந்து தேர்­த­லில் வென்ற காபந்து அர­சாங்­கத்­தி­டம் வந்­துள்­ளது.

இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பில் மியன்­மார் அர­சாங்­கப் பேச்­சா­ள­ரி­டம் இருந்து பதில் எத­னை­யும் ஊட­கங்­க­ளால் பெற இய­ல­வில்லை.