சிட்னி: ஆஸ்திரேலியாவில் ரயில் தண்டவாளத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் இரு கழிகளில் தொங்கியதை அடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள நியூகாசல் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற 19 ரயில்கள் தொல்லைக்கு உள்ளாயின.
அந்தத் துறைமுகத்திற்கு அருகே உள்ள கூராகாங் என்ற நகரில் ரயில்பாதையின் ஒரு பகுதி, ஒரு மணி நேரத்திற்கும் அதிக நேரம் பாதிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ரயில் கழகம் என்ற ரயில்பாதை நிர்வாகம் தெரிவித்தது.
தண்டவாளத்தில் இருந்து கழிகளை அகற்றிய அதிகாரிகள் போராட்டம் நடத்திய 22 வயது மாதைக் கைது செய்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்தது.
ஆஸ்திரேலியா சுற்றுக்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடப்பதாக டுவிட்டரில் பிளாக்கேட் ஆஸ்திரேலியா என்ற அமைப்பு கூறியது.
மெல்பர்ன் துறைமுகத்திற்கு அருகேயும் பிரிஸ்பன் துறைமுகத்திற்கு அருகேயும் தனித்தனியான இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.


