பூர்வகுடியினரின் உடல்பகுதிகளை மீட்க முயற்சி

பூர்வகுடியினரின் உடல்பகுதிகளை மீட்க முயற்சி

1 mins read
a2db3154-bf9e-4727-ae28-809b5d0b9c24
இதுவரை கிட்டத்தட்ட 900 பூர்வக்குடி மக்களின் உடல் பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளன.  - படம்: பிக்ஸாபே

கல்லறைக் கொள்ளைக்காரர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ள நியூசிலாந்து பூர்வக்குடி மக்களின் உடல் பகுதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக சொந்த நாட்டுக்குத் திருப்பிக் கொண்டுவர முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வத்துடன் இருந்த பிரிட்டிஷ் கடலோடியான கேப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தில் 1769ஆம் ஆண்டில் காலடி வைத்தார்.

பிறகு ஐரோப்பிய குடியேறிகள் மோரி இன பூர்வக்குடி மக்களின் உடல் பகுதிகளைக் குறி வைத்தனர்.

இதை நினைத்து நினைத்து நியூசிலாந்து மக்களில் பலரும் இன்னமும் கோபப்படுகிறார்கள். கவலை அடைகிறார்கள்.

நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் உள்ள டி பாபா தேசிய அரும்பொருளகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் அவற்றை உலகம் முழுவதும் தேடித்தேடி சில தடயங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இதுவரை கிட்டத்தட்ட 900 பூர்வக்குடி மக்களின் உடல் பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளன. இன்னும் 300 முதல் 400 உடல் பகுதிகள் உலகம் முழுவதிலும் உள்ள பல இடங்களில் இருக்கின்றன என்று அந்த அரும்பொருளகத்தின் உடல்பகுதி மீட்புச் செயல்திட்ட நிர்வாகி டி ஹரிகிகி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்