லாஸ் ஏஞ்சலிஸ்: பருவநிலை மாற்றத்தை ஆக்கபூர்வமான முறையில் நேரடியாகக் கையாளுமாறு திரையுலகை ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் பிரபலங்கள்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஜூன் மாதம் 21ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்று அவர்கள் இம்முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜேன் ஃபோண்டா, ஆஸ்கார் விருது பெற்ற ‘எவ்ரித்திங், எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் ‘ஹாலிவுட் கிளைமேட் சமிட்’ எனப்படும் ஹாலிவுட் பருவநிலை மாநாட்டில் பங்கேற்பர்.
திரைப் பிரபலங்களை விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் ஆகியோருடன் ஒன்றுகூட வைத்து அவர்களைத் திரையுலகில் மாற்றம் ஏற்படுத்தச் செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் வாயிலாக பருவநிலை மாற்றம் தொடர்பில் உலகளவில் பார்வையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஊக்குவிப்பது இதன் இலக்கு.