ஹோண்டுராஸ் சிறையில் வன்முறை; குறைந்தது 41 பேர் பலி

1 mins read
bd77b0fa-b0c1-4746-b8c8-576ba8586a72
ஹோண்டுராசில் உள்ள பெண்கள் சிறைச்சாலை ஒன்றில் குறைந்தது 41 பேர் மாண்டனர்.  - படம்: ராய்ட்டர்ஸ்

டெகுசிகல்பா: ஹோண்டுராசில் உள்ள பெண்கள் சிறைச்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமையன்று ஏற்பட்ட மோதலில் குறைந்தது 41 பேர் மாண்டனர்.

எதிரிக் கும்பல்களுக்கு இடையே சண்டை மூண்டதாகவும் அதனைத் தொடர்ந்து ஒரு கும்பல் சிறை அறை ஒன்றுக்குத் தீ வைத்ததாகவும் அறியப்படுகிறது.

பெரும்பாலானோர் தீயில் சிக்கி மடிந்தனர். வேறு சிலர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, ஹோண்டுராஸ் பாதுகாப்பு துணையமைச்சர் ஜுலிசா விலானுவேவா அவசரநிலையை அறிவித்துள்ளார். வன்முறை தொடர்பில் விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிகூறினார்.

தீயணைப்பாளர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் ஆகியோர் உடனடியாகப் பணியில் அமர்த்தப்படவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்