நியூயார்க்: டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காண்பதற்கான பணியை மேற்கொண்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் ஞாயிற்றுக்கிழமையன்று காணாமற்போனது.
இப்போது, கப்பல் காணாமல்போன வடஅட்லாண்டிக் கடற்பகுதியில் நீருக்குள்ளிருந்து சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கரையோரக் காவல்படை இத்தகவலை வெளியிட்டது.
காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலில் ஐவர் இருந்தனர்.
கடலடியிலிருந்து சத்தம் கேட்டதைக் கனடாவின் ஆகாயப் படை விமானம் ஒன்று அறிந்தது.
அதைத் தொடர்ந்து சத்தம் எங்கிருந்து வந்தது என்பதை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க கரையோரக் காவல்படையின் ஒரு பிரிவு தனது அதிகாரத்துவ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்தது.
ஆர்ஓவி எனப்படும் ஆளில்லா வாகனத்தின் மூலம் சத்தம் வெளிவரும் பகுதியை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை முயற்சி பலனளிக்கவில்லை என்றும் பணிகள் தொடர்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.