தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டுவிட்டரிடம் விளக்கம் கோரும் ஆஸ்திரேலியா

1 mins read
80298511-d8e9-4cf2-9cd0-1b41ddd9eb7d
டுவிட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் 62,000 கணக்குகள் மீதான தடைகளை நீக்கிவிட்டார். - படம்: ஏஎஃப்பி

சிட்னி: சமூக ஊடகமான டுவிட்டர் அதன் தளத்தில் இணைய வெறுப்புணர்வை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து அதனிடம் விளக்கம் கேட்டிருப்பதாக ஆஸ்திரேலிய இணைய நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

டுவிட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் 62,000 கணக்குகள் மீதான தடைகளை நீக்கிய பிறகு, அந்நாட்டில் ஆக அதிகமான புகார்கள் செய்யப்பட்டுள்ள தளமாக டுவிட்டர் விளங்குகிறது.

இணைய வெறுப்புணர்வைக் கையாள்வதில் டுவிட்டர் மிகுந்த பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக மின்பாதுகாப்பு ஆணையர் ஜூலி இன்மான் கிராண்ட் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

டுவிட்டர் அதன் தளத்தில் இடம்பெறும் குழந்தைத் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கங்களை எவ்வாறு கையாள்கிறது என்று ஏற்கெனவே அதனிடம் கேட்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய நிறுவனம் கூறியது.

இணைய வெறுப்புணர்வின் தொடர்பில் தமக்குக் கிடைத்த புகார்களில் மூன்றில் ஒரு பகுதி டுவிட்டர் தொடர்பானவை என்பதை அறிந்ததும் அதற்குச் சட்டபூர்வக் கடிதத்தை அனுப்பியிருப்பதாக ஆணையர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்