தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க மக்கட்தொகை மூப்படைந்துள்ளது

1 mins read
0509bf44-b695-40b8-b9cf-9f856bb1be23
அமெரிக்காவின் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதால் மக்கட்தொகை மூப்படைந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மக்கட்தொகை மூப்படைந்துள்ளதாக அந்நாட்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மக்கட்தொகையின் சராசரி வயது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 38.9ஆக உயர்ந்துள்ளது. 2000ஆம் ஆண்டில் அது 35ஆகவும் 1980ஆம் ஆண்டில் 30ஆகவும் இருந்தது.

ஐரோப்பிய, ஆசிய நாடுகளைப் போல அமெரிக்காவின் மக்கட்தொகையும் மூப்படைந்து வருவதை இப்புதிய தரவுகள் காட்டுகின்றன. இதனால் ஊழியரணி, பொருளியல் , சமூகத் திட்டங்கள் ஆகியவை தொடர்பான சவால்கள் ஏற்பட்டுள்ளன.

மூப்படையும் மக்கட்தொகைக்குக் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதே முக்கிய காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட்-19 கிருமித்தொற்று தலைதூக்கிய ஆண்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. அதையடுத்து, குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளபோதிலும் முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது அது குறைவாகவே உள்ளது.

இந்த நிலை அனைத்துலக அளவில் உள்ளது. அமெரிக்காவைவிட கூடுதல் வலிமைமிக்க சமூகத் திட்டங்கள் கொண்ட நார்வே, சுவீடன், ஃபின்லாந்து போன்ற நாடுகளிலும் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இந்த நாடுகளில் குழந்தைப் பராமரிப்புச் சேவைகளுக்கான கட்டணத்துக்குப் பெருமளவிலான கழிவு தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் பணக்கார நாடுகளில் உள்ள இளம் பெண்கள் 20 வயதிலிருந்து 30 வயது வரை கல்விக்கும் வேலைக்கும் முன்னுரிமை தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சற்று மூப்படைந்து திருமணம் செய்துகொள்வதாகவும் குறைவான குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்