வாஷிங்டன்: ஆண்மைக் குறைபாட்டிற்கான புதிய மருந்தை மருந்துக்கடைகளிலிருந்து வாங்கலாம் என்று அமெரிக்காவின் உணவு, மருந்து ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, ‘எரோக்சோன்’ எனப்படும் அந்தக் களிம்பு வகை மருந்தை அமெரிக்காவெங்கும் உள்ள மருந்துக்கடைகளில் வாங்கலாம். இந்த மருந்தை வாங்க மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்மைக் குறைபாட்டுப் பிரச்சினையால் அவதியுறும் ஆண்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தும்போது வெறும் பத்து நிமிடங்களில் தீர்வு காணப்படுவதாக மருந்தைத் தயாரித்த ஃபுடுரா மெடிக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது கிடைக்கும் மருந்து மாத்திரைகளைவிட இந்த மருந்து மிக வேகமாக வேலை செய்வதாக அது கூறியது.


