தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வானூர்தித் தயாரிப்பில் முழுவீச்சில் இறங்கும் வட, தென்கொரியா

1 mins read
25106685-0655-4a2d-aeb9-d89a47ba8921
இரு நாடுகளுக்கும் வானூர்திகள் மிகவும் முக்கியமாக அமையலாம். - படம்: ஏஎஃப்பி

சோல்: தங்களின் ராணுவத்துக்கு வலுசேர்க்க வானூர்திகளைத் தயாரிப்பதில் வடகொரியாவும் தென்கொரியாவும் முழுவீச்சில் இறங்கியுள்ளன.

1950ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கும் இடையிலான பூசல் தொடங்கியது. நிறைவு நாள் நெருங்கும் வேளையில் எல்லைப் பகுதியில் தங்களின் ராணுவ பலத்தை மேம்படுத்த அவை வானூர்தித் திட்டங்களுக்காக அதிகம் செலவு செய்து வருகின்றன.

தென்கொரியாவில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் வானூர்திகளை இயக்குவதற்கான வசதியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

வடகொரியா, பெரிய வானூர்தி ஒன்றை அதன் பாங்கியோன் ஆகாயப் படைத் தளத்தில் சோதனையிடத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. என்கே நியூஸ் செய்தி நிறுவனம் இதைத் தெரிவித்தது.

அந்த வானூர்தியின் இறக்கைகளை உள்ளடக்கிய மொத்த அகலம் சுமார் 35 மீட்டர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்