மலேசியாவில் ஆட்கடத்தல்; தாய்லாந்து நாட்டவர் நால்வர்மீது குற்றச்சாட்டு

1 mins read
7a67ba82-3c1e-42ed-882c-a4975cd95648
ஆட்கடத்தல் கும்பல்கள் நடத்திய 20க்கும் மேற்பட்ட முகாம்களில் 139 கல்லறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

மியன்மார் மக்கள்பலரைக் கடத்தியிருக்கலாம் என்று நான்கு தாய்லாந்து நாட்டவர் மீது மலேசியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மலேசியா-தாய்லாந்து எல்லையில் பல சடலங்கள் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது கடந்த 2015ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மாண்டவர்கள் ஆட்கடத்தல் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

மலேசிய எல்லையில் உள்ள வாங் கெலியன் பகுதியில் ஆட்கடத்தல் கும்பல்கள் 20க்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தியதாக நம்பப்படுகிறது. அந்த முகாம்களில் 139 கல்லறைகள் இருந்தன.

ஆட்கடத்தல் செய்பவர்கள் முகாம்களை அமைக்க தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளையும் மலேசியாவின் வடக்கு பகுதிகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஆட்கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். 

பிணையில் வெளியே செல்லவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் தாய்லாந்தில் இருந்து இவ்வாரம் மலேசியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். 

ஆட்கடத்தல் தொடர்பாக 2017ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தாய்லாந்து நாட்டினர் பத்துப் பேர் சட்டரீதியாக மலேசியாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்