வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை ரத்து செய்து ஓராண்டாகிறது. இதனால் மில்லியன்கணக்கான பெண்கள் கருக்கலைப்பை எளிதாக மேற்கொள்ள முடியாமல் போய்விடுகிறது என்று குழந்தைப் பிறப்பு தொடர்பான ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.
கருக்கலைப்பு சட்டபூர்வமானது என்றாலும், பெண்களும் சிறுமிகளும் அதனை மேற்கொள்வதற்கு நிறைய தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மருத்துவச் சந்திப்பிற்காக மருத்துவமனைகளில் நீண்டநேரம் காத்திருப்பது முதல் பதின்ம வயதினரைக் கருக்கலைப்பு செய்யவிடாமல் கட்டுப்படுத்தும் மாநில மசோதாக்கள் வரை அவர்கள் பல தடைகளை எதிர்நோக்குகின்றனர்.
கருக்கலைப்பு, கருத்தடை, இனப்பெருக்கம் தொடர்பான பாலியல் சுகாதாரப் பராமரிப்பு போன்றவற்றிற்கு இயற்கையாகவே கருத்தியல்ரீதியாக ஒரு தொடர்புள்ளது என்று ‘கட்மாச்சார்’ மைய ஆராய்ச்சியாளர் மேகன் கேவனாக் குறிப்பிட்டார்.
மேலும், “கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை ரத்து செய்ததை நான் மிகவும் கவலைக்குரிய ஒன்றாகப் பார்க்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

