வழக்கத்துக்கு முன்னரே இதய நோய்க்கு ஆளாகும் மலேசியர்கள்

வழக்கத்துக்கு முன்னரே இதய நோய்க்கு ஆளாகும் மலேசியர்கள்

1 mins read
9fcefb0b-a27e-4f47-b7b9-f8dcba6e019a
மலேசியர்கள் சராசரியாக 58 வயதில் இதய நோய்க்கு ஆளாகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் அதிகமானோர் இதய நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

அந்நாட்டில் சராசரியாக ஒருவருக்கு 58 வயதில் மாரடைப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது. தாய்லாந்தில் 63 வயதிலும் சிங்கப்பூரில் 68 வயதிலும் சராசரியாக ஒருவர் இதய நோய்க்கு ஆளாகிறார்.

மேலும், உலகளவில் ஒருவர் இதய நோய்க்கு ஆளாவதற்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி வயதைக் காட்டிலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே மலேசியர்கள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

மலேசியர்கள் பலரிடையே அதிகமான கொழுப்புச் சத்து இருப்பது அடையாளம் காணப்படாமல் போவது இந்நிலைக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் உடலில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருந்தது 24.6 விழுக்காட்டு மலேசியர்களுக்குத் தெரியவில்லை.

இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏலன் ஃபோங் ஆசிரியராக இருந்த மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஉலகம்மருத்துவம்