ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் மீண்டும் தோன்றினார்

ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் மீண்டும் தோன்றினார்

1 mins read
abe02e43-2294-46af-acb1-618496e79fbe
ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: அண்மையில் ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரை வாக்னர் துணைப் படை கைப்பற்றி குறுகிய நேரத்துக்கு அதைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் அதிகாரத்துக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்தது.

இந்நிலையில், வாக்னர் துணைப் படை தனது முடிவை மாற்றிக்கொண்டு அந்நகரத்திலிருந்து பின்வங்கியது. இதனால் ரஷ்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

இந்த உள்நாட்டுப் பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகு ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு, வெளியுலகிற்குத் தமது முகத்தைக் காட்டியுள்ளார்.

சக ஊழியருடன் விமானத்தில் அவர் பயணம் செய்வதைக் காட்டும் காணொளியை ரஷ்யத் தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்டது. அந்தக் காணொளியில் ஒலி ஏதும் இல்லை. அது எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

திரு ஷோய்கு நலமாகவும் அமைதியாகவும் காணப்பட்டதாக ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான தொலைக்காட்சி ஒளிவழி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
ரஷ்யா