இண்டியானா: அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சுழல்காற்று புரட்டிப்போட்டது.
இதன் விளைவாக பல கட்டடங்கள் தரைமட்டமாகின. தப்பிக்க இடமின்றி பலர் சிக்கிக்கொண்டனர். பலத்த காற்று வீசியதுடன் ஆளங்கட்டி மழை பெய்ததால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இண்டியானாவை உலுக்கிய சுழல்காற்றைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் வலம் வந்தன.