சிட்னி: தவறான, உண்மைக்கு மாறான தகவல் பகிரப்படும் பிரச்சினையால் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகல், டிக்டாக் போன்ற பெருநிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவில் புதிதாக இயற்றப்பட்டு உள்ள சட்டம், தவறான தகவல் வெளியிடப்படுவதைத் தடுக்க வகை செய்கிறது.
உண்மைக்கு மாறான தகவல்கள் பகிரப்படும் பிரச்சினையை இதுபோன்ற பெருநிறுவனங்கள் களையாவிட்டால் பெரும் தொகையை அவை அபராதமாகச் செலுத்த நேரிடும்.
தகவல்கள் சரியா என்று சோதித்து வெளியிடுவது கட்டாயம் என்று நேற்று ஆஸ்திரேலியா தெரிவித்தது. இதை மீறும் நிறுவனங்கள் தங்களது வருடாந்திர வருவாயில் ஐந்து விழுக்காடு வரை அபராதமாகச் செலுத்த வேண்டும் என ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம் வரையறுக்கிறது.