தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

6 சட்டமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட மூடா முடிவு

1 mins read
129724f0-51df-4b72-b9ce-929f7594d30d
மலேசியாவில் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. - படம்: கோப்புப் படம்

பெட்டாலிங் ஜெயா: வரவிருக்கும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மூடா கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அதன் தலைவர் சையத் சாதிக் சையது அப்துல் ரஹ்மான் தெரிவித்து உள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரிவான விவாதங்கள் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது,” என்றார்.

இவ்வாறு தனித்துப் போட்டியிடுவதற்கு பக்கத்தான் ஹரப்பானுடனான கூட்டணிப் பேச்சு தோல்வி அடைந்தது காரணமல்ல என்றும் அவர் விளக்கினார்.

மூடா தனித்துப்போட்டியிடுவதால் பக்கத்தான் ஹரப்பான் வாக்குகள் சிதறும் என்று கூறப்படுவது சிலர் கிளப்பிவிட்ட தகவல் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்