கெடா சட்டமன்றம் கலைக்கப்படுகிறது

கெடா சட்டமன்றம் கலைக்கப்படுகிறது

1 mins read
83b5d015-6bd9-4e06-a579-af7c73433457
கெடா மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலம் ஜூலை 4 வரை உள்ளது. - படம்: கோப்புப் படம்

அலோர் ஸ்டார்: சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மாநில சட்டமன்றத்தை புதன்கிழமை கலைக்க கெடா மாநில சுல்தான் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து சுல்தானுடன் கலந்து பேசியதாக கெடா முதலமைச்சர் முஹம்மது சனுசி முஹம்மது நோர் தெரிவித்துள்ளார்.

“கெடா மாநிலத்தில் 14வது சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக ஜூன் 28ஆம் தேதி சட்டமன்றத்தைக் கலைக்க சுல்தான் அனுமதி அளித்துள்ளார்,” என்றார் அவர்.

கலைக்கப்பட்ட பிறகு தமது தலைமையிலான அரசு காபந்து (பராமரிப்பு) அரசாகச் செயல்படும் என்று முதலமைச்சர் முஹம்மது சனுசி கூறினார்.

கெடா சட்டமன்றத்தின் ஆயுட்காலம் ஜூலை 4 வரை உள்ளது. 2018 ஜூலை 3ஆம் தேதி அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்