வாழ்நாள் பயண அட்டையுடன் 23 மில்லியன் மைல் பறந்துசென்ற அமெரிக்கர்

வாழ்நாள் பயண அட்டையுடன் 23 மில்லியன் மைல் பறந்துசென்ற அமெரிக்கர்

1 mins read
8b619c49-62c5-40f8-aab5-2aeccf9c061d
2019ஆம் ஆண்டு திரு டாம் ஸ்டுக்கர் 373 விமானப் பயணங்களை மேற்கொண்டார். அந்தத் தொலைவு, நிலவுக்கு ஆறுமுறை சென்று திரும்புவதைவிட அதிகம் என்று கூறப்பட்டது. - படம்: யுஏ1ஃபிளையர்/இன்ஸ்டகிராம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த 69 வயது டாம் ஸ்டுக்கர் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திடமிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்நாள் பயண அட்டை ஒன்றை வாங்கினார்.

அதைப் பயன்படுத்தி அவர் இதுவரை 23 மில்லியன் மைல்களுக்குமேலான தொலைவை விமானத்தில் கடந்துள்ளார். அது 35 மில்லியன் கிலோமீட்டருக்குச் சமம். ஏறத்தாழ 100 நாடுகளுக்கு அவர் சென்றுவந்துள்ளார்.

திரு ஸ்டுக்கர் 1990ஆம் ஆண்டில் US$290,000 (S$392,000) செலுத்தி அந்த அட்டையை வாங்கியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது. வாழ்க்கையில் தாம் செய்த ஆகச் சிறந்த முதலீடு அது என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

1969ஆம் ஆண்டில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு சுமந்து சென்ற அப்போலோ 11 விண்கலம் 953,000 மைல் தொலைவைக் கடந்தது. அதைவிட அதிகமான தொலைவைத் திரு ஸ்டுக்கர் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டில் அவர் 373 விமானப் பயணங்களை மேற்கொண்டார். அவற்றின் மொத்த தொலைவு, நிலவுக்கு ஆறுமுறை சென்றுவருவதைவிட அதிகம்.

அந்தப் பயணங்களுக்குக் கட்டணம் செலுத்தியிருந்தால், அவர் US$2.4 மில்லியன் செலவிட்டிருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்