மக்கா: சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சவூதி அரேபியாவின் அரஃபாட் மலையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்களது ஹஜ்ஜுக் கடமையை நிறைவு செய்துவருகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு அதிகமானோர் ஹஜ்ஜுப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாண்டு மொத்தம் 2.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் ஹஜ்ஜு யாத்திரை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
கொவிட்-19 காரணமாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் புனிதப் பயணம் செல்ல முடியாமல் இருந்தவர்கள் இந்த ஆண்டில் தங்களது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
சவூதி அரேபியாவில் திங்கட்கிழமை வெப்பநிலை 46 டிகிரி செல்சியசாகப் பதிவானது. வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள, புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் குடைகளைப் பயன்படுத்தினர்.

