தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்னியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் மரணம்

1 mins read
091c27bb-2a57-425f-bab3-a35b9991ec22
சிட்னி நகரின் பரபரப்பான சாலையில் உச்ச நேரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டாய் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 

அதில் ஒரு ஆடவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

கொல்லப்பட்ட ஆடவர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த முக்கியநபர் என்று அந்நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆடவரின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை.

நகரின் பரபரப்பான சாலையில் உச்ச நேரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கொல்லப்பட்ட ஆடவருக்கு 48 வயது, அவரைத் திட்டமிட்டு மற்றொரு கும்பல் கொன்றிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மற்ற மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியாவில் போதைப்பொருள் விநியோகம் மூலம் கும்பல்கள் அதிக லாபம் ஈட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்