தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானுக்கு $4 பில்லியன் கடன் வழங்கும் அனைத்துலகப் பண நிதியம்

1 mins read
b25f1a05-01fb-4dc8-95a2-56a8179a16b1
2022 ஜூன் 2ஆம் தேதி கராச்சியில் தங்கள் வாகனங்களுக்கு எண்ணெய் வேண்டி காத்திருந்த மக்கள். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு $4 பில்லியன் கடன் வழங்க அனைத்துலகப் பண நிதியம் முதற்கட்ட ஒப்புதல் அளித்து உள்ளது. இனி, நிதியத்தின் நிர்வாக சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுபற்றி இம்மாத நடுப்பகுதியில் அச்சபை ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் 1950களில் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து உதவிபெற்று, நிதிச் சிக்கலிலிருந்து மீண்டிருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பொருளியலை நிலைப்படுத்த தேவையான உடனடி நடவடிக்கைகளுக்கு அண்மைய கடனுதவி ஆதரவளிக்கும் என்று அந்நிதியம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நிதியத்திடமிருந்து கடனுதவி பெற ஏதுவாக, வரிகளை உயர்த்தவும் செலவினங்களைக் குறைக்கவும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்