இறுதிச் சடங்குக்குமுன் கலவர பூமியாகத் தொடரும் பிரான்ஸ்

1 mins read
d9038b64-1150-45d0-bed9-4b9e2b7e0874
பிரான்ஸ் புறநகர்ப் பகுதி ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் ஜூன் 30ஆம் தேதி நிகழ்ந்த கைகலப்பின்போது காவல் துறையினர் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க ஆயத்தமானார்கள்.   - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பாரிஸ் நகரில் சாலை சந்திப்பு ஒன்றில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் 17 வயது உணவு விநியோக வாகன ஓட்டுநர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்ட விவகாரம் அந்த நாடு முழுவதும் காட்டுத் தீயாகப் பரவி வன்செயலைக் கிளப்பிவிட்டு இருக்கிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட இளையரின் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடுகள் நடந்துவர, மக்களின் கொந்தளிப்பை எதிர்நோக்கும் அந்நாட்டு அரசாங்கம் 45,000 காவல் அதிகாரிகளையும் பல்வேறு கவச வாகனங்களையும் தயார்நிலையில் வைத்துள்ளது. 1,311 பேர் கைதாகியுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அதனால் பிரான்சின் சுற்றுலாத் தொழில்துறையில் பாதிப்புகள் தலைதூக்கத் தொடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹோட்டல்கள், உணவகங்களுக்கான முன்பதிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. வன்செயல் காரணமாக சில ஹோட்டல்களும் உணவகங்களும் சேதம் அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாரிசில் முக்கியமான ஹோட்டல், உணவு விநியோகத் தொழில் துறை முதலாளிகளைப் பிரதிநிதிக்கும் சங்கத்தின் பேராளரான தியேரி மார்க்ஸ், பல ஹோட்டல்களிலும் முன்பதிவுகள் ரத்தாகிவிட்டன என்று கூறினார். வன்செயலால் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

உலகின் மிகப் பிரபலமான சுற்றுலா நகர்களில் ஒன்றான பாரிசில் ஹோட்டல், உணவு தொழில்துறைகளைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்