புறக்கணிக்கப்பட்ட யானை இலங்கையிலிருந்து தாய்லாந்து திரும்பியது

புறக்கணிக்கப்பட்ட யானை இலங்கையிலிருந்து தாய்லாந்து திரும்பியது

1 mins read
6dc1bbd1-bfa4-4d98-b7a4-bcfa2d391399
4,000 கிலோ எடை கொண்ட இந்த யானை, ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்டது.  - படம்: இபிஏ

கொழும்பு: இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிடம் வழங்கப்பட்ட தாய்லாந்து யானை ஒன்று, ஞாயிற்றுக்கிழமை அதன் சொந்த நாட்டிற்கு விமானத்தில் கொண்டுசெல்லப்பட்டது.

அந்த யானை தவறாக நடத்தப்பட்டது குறித்து அரசதந்திர ரீதியில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

முத்து ராஜா எனும் பெயர் கொண்ட அந்த 29 வயது யானையை 2001ல் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது தாய்லாந்து.

ஆனால், தெற்கு இலங்கையில் உள்ள பௌத்த ஆலயத்தில் இருந்தபோது அந்த யானை துன்புறுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள தாய்லாந்து கோரியது.

இந்நிலையில், 4,000 கிலோ எடை கொண்ட அந்த யானை, ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்டது. இதற்கு US$700,000 (S$946,000) செலவானதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

சியாங் மாயில் தரையிறங்கியவுடன், அருகிலுள்ள இயற்கை வனப்பகுதியில் அது தனிமைப்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்