வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் அரங்கேற்றப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்த நகர காவல்துறை தெரிவித்தது.
மேரிலேண்டு மாநிலத்தில் உள்ள அந்த நகரில் புரூக்ளின் என்ற பகுதியில் சனிக்கிழமை பின்னிரவு 12.30 மணிக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்தது என்றும் காவல்துறையுடன் பலரும் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்ததாகவும் இடைக்கால காவல்துறை ஆணையர் ரிச் வோர்லி கூறினார்.
காயம் அடைந்தோரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
சந்தேகப்பேர்வழியை அடையாளம் காண அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.
இந்தப் படுகொலைக்கான நோக்கத்தை கண்டறிய அவர்கள் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

