தெற்கு கரோலினா: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் முதலை தாக்கி 69 வயது பெண் ஒருவர் மாண்டார்.
சம்பவம் ஹில்டன் ஹெட் தீவு வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.
ஏஞ்சலா வெயின்ஸ் எந்த அந்தப் பெண் காலை 7 மணியளவில் தமது நாயுடன் ஒரு குளத்தின் ஓரமாக நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முதலையால் அவர் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
காலை 9:30 மணிவாக்கில் ஏஞ்சலாவின் உடலை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். ஏஞ்சலாவின் உடல் அருகில் முதலையும் இருந்தது.
கிட்டத்தட்ட 3 அடி நீளம் கொண்ட அந்த ஆண் முதலையை வனத்துறை அதிகாரிகள் பிடித்து, பின்னர் அதனைக் கருணைக் கொலை செய்தனர்.
அமெரிக்காவில் இவ்வாண்டில் மட்டும் முதலை தாக்கி இருவர் மாண்டுபோயினர்.

