மொடர்னா நிறுவனம் தனது ‘எம்ஆர்என்ஏ’ தடுப்பூசிகளை சீனாவில் விற்க பெய்ஜிங்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் அதிகரித்துவரும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தாகியுள்ளது
உலகின் ஆகப்பெரும் சந்தைகளின் ஒன்றான சீனாவில் கால்பதிக்க மொடர்னா பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வந்தது.
கொவிட்-19 நோய்த்தொற்றுக்காக ‘எம்ஆர்என்ஏ’ தடுப்பூசியைத் தயாரித்த மொடர்னா நிறுவனம் கிட்டத்தட்ட 1.35 பில்லியன் வெள்ளியை சீனாவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் மொடர்னா அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஷாங்காயில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கொவிட்-19 நோய்த்தொற்றுக்காக சீனா அதன் சொந்த தடுப்பூசிகளை மட்டும்தான் பயன்படுத்தியது. அது மொடர்னா, ஃபைசர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளைப் பயன்படுத்தவில்லை.

