புனிதத் தலம் மீது தாக்குதல்: இருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

புனிதத் தலம் மீது தாக்குதல்: இருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

படம்: அமின் பகேரி

08 Jul 2023 - 6:21 pm

1 mins read

துபாய்: ஷியா புனிதத் தலம் ஒன்றின்மீது நடத்திய தாக்குதலுக்காக ஆடவர்கள் இருவரை ஈரான் சனிக்கிழமை தூக்கிலிட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலுக்கு எஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.

தெற்கு ஈரானில் உள்ள ஷிராஸ் நகரில் விடியற்காலையில் அவ்விருவரும் தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்புடன் தாங்கள் தொடர்பில் இருந்ததாகவும் அந்தப் புனிதத் தலத்தின்மீது தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்ய உதவியதாகவும் அந்த ஆடவர்கள் முன்னதாக வழக்கு விசாரணையின்போது கூறியிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்
மரண தண்டனை