லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் புறத்தே உள்ள ஒரு விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் ஒரு திடலில் சனிக்கிழமை காலை நேரத்தில் ஒரு தொழில்துறை விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்துவிட்டது.
அந்த விமானத்தில் இருந்த ஆறு பேரும் மாண்டுவிட்டனர் என்று அந்த வட்டார அதிகாரிகளும் மத்திய அதிகாரிகளும் தெரிவித்தனர்.
அந்த செஸ்னா சி550 ரக சிறு விமானம் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து பறந்து சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை சுமார் 4.15 மணிக்கு விபத்துக்குள்ளாகிவிட்டது என்று அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மரணம் அடைந்த பயணிகள் பற்றிய விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மன்றம் அந்த விபத்து பற்றி புலன்விசாரணை நடத்தும் என்று மத்திய நிர்வாகம் குறிப்பிட்டு இருக்கிறது.

