தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளி விபத்து: இரண்டாவது சிறுமி உயிரிழப்பு

1 mins read
498c624d-7162-4546-919a-ba11a74cbcdf
விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடம் ஒன்றின்மீது கார் ஒன்று மோதிய விபத்தில் மேலும் ஓர் எட்டு வயதுச் சிறுமி இறந்துவிட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்து பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்பதைக் காவல்துறையினர் தெளிவுபடுத்தினர்.

நான்கு முதல் எட்டு வயது வரையுள்ள மாணவர்கள் பயிலும் அப்பள்ளியில் கல்விப் பருவத்தின் கடைசி நாளில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஏற்கெனவே எட்டு வயதுச் சிறுமி ஒருவர் இறந்துவிட்டார்.

நாற்பது வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

இந்த விபத்தைத் தொடர்ந்து மேலும் சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.

விபத்துக்குக் காரணமான 46 வயது பெண் ஓட்டுநர் சம்பவ இடத்தில் தடுத்துவைக்கப்பட்டார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாக அந்த மாது மீது சந்தேகிக்கப்படுகிறது. அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
விபத்து