தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘முதலீட்டு நிதி’ மோசடியில் $430,000 இழந்த பார்வையற்றோர்

1 mins read
1be429dd-0b2d-4456-8041-dd1e1b45962d
பாதிக்கப்பட்ட சிலர் காவல்துறையிடம் புகாரளித்ததாகவும் ஆனால் அதன் தொடர்பில் அடிக்கடி காவல் நிலையம் செல்ல இயலாததால் புகார் தொடர்பில் மேல்விவரம் பெற இயலவில்லை என்றும் கூறப்பட்டது. - படம்: த ஸ்டார்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில், 30 பேர் தாங்கள் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை மோசடிக்காரர்களிடம் இழந்தது தெரிய வந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் 55 வயதுக்கு மேற்பட்ட பார்வையற்றோர். முதலீட்டு நிதி மோசடியில் மொத்தம் 1.5 மில்லியன் ரிங்கிட்டிற்கு மேலான தொகையை அவர்கள் இழந்துள்ளனர். ‘கூப்பர் மார்க்கெட்ஸ் மலேசியா’ எனும் நிதி நிறுவனத்திடம் அவர்கள் ஏமாந்ததாகக் கூறப்பட்டது. ஓய்வுக்காலத்தில் நிதிச் சுதந்திரம் வேண்டி முதலீடு செய்ததாக பாதிக்கப்பட்டோர் கூறினர்.

2021ல் அந்நிறுவனத்தை மலேசியப் பங்குகள் ஆணையம் அதன் முதலீட்டு எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்தது. ஆணையத்தின் ஒப்புதல் அல்லது அனுமதி இன்றிச் செயல்படும் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரிக்கும் பட்டியல் அது.

தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்த வருத்தத்தில் உழலும் வேளையில் இழந்த தொகையில் ஒரு பகுதியாவது திரும்பக் கிடைக்கும்படி யாரேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாகப் பாதிக்கப்பட்டோர் சிலர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்