வியட்னாமின் ஆகப் பெரிய தனியார் மருத்துவமனையான எஃப்வி மருத்துவமனையை சிங்கப்பூரின் தாம்சன் மெடிக்கல் குழுமம் 381.4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$517 மில்லியன்) வாங்கியுள்ளது.
இதன்மூலம் இவ்வட்டார நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளியலுக்குள் தாம்சன் மெடிக்கல் குழுமம் அடியெடுத்து வைத்துள்ளது.
மருத்துவமனையை வாங்க உலகளாவிய நிலையில் கிட்டத்தட்ட 20 நிறுவனங்கள் கடுமையாகப் போட்டியிட்டன.
எஃப்வி மருத்துவமனையை பிரெஞ்சுக்காரர்கள் கட்டினர்.


