சாண்டா குரூஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா குரூசில் அண்மை ஆண்டுகளாக கோடைக்காலத்தில் நூதனத் திருட்டுகள் நடந்து வருகின்றன.
அலையாடலுக்கு (சர்ஃபிங்) வருவோரிடம் அதற்கான பலகையைப் பறித்துக்கொள்கிறது பெண் ‘ஆட்டர்’ ஒன்று.
‘ஆட்டர் 841’ என்று அழைக்கப்படும் அதன் குறும்புத்தனம் சென்ற வாரயிறுதியில் மிகவும் எல்லை மீறிவிட்டது. வேறுவழியில்லாமல் அதைப் பாதுகாப்பாகப் பிடித்து மீண்டும் கடலுக்குள் தொலைவில் கொண்டு விட முயற்சி செய்கிறார்கள். கலிஃபோர்னியா மீன்வள, வனவிலங்குத் துறை இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
இரு கால்களையும் கைகளையும் முழுக்க பலகையில் வைத்தபடி, அதன் முகப்பில் நின்று இவ்விளையாட்டில் ஈடுபடுவார்கள்.அந்தமுறை ‘ஹேங் டென்’ என்று அழைக்கப்படும்.
ஐந்த வயதாகும் ‘ஆட்டர் 841’ பயமின்றி, அலையாடற் பலகைகளைப் பிடுங்க முயற்சி செய்வதும் அதில் வெற்றிபெற்றவுடன் பலகையில் முழுவதுமாக ஏறிக்கொண்டு அலைச்சறுக்கு செய்வதும் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலம்.
கலிஃபோர்னியா வட்டார ‘ஆட்டர்’ அருகிவரும் ஓர் உயிரினம் ஆகும்.