தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10 ஆண்டுகளுக்குமுன் கொலை செய்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
295c152c-c413-4539-abad-6c449aae3e95
3 பெண்களைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரெக்ஸ் ஹொயர்மனின் வீட்டில் இருந்து கார் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். - படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: பத்து ஆண்டுகளுக்குமுன் நியூயார்க் நகரில் பெண்கள் மூவரைக் கொலை செய்து அவர்களின் சடலங்களை ‘லாங் ஐலண்ட்’ கடற்கரையோரம் வீசிச் சென்றதாக ரெக்ஸ் ஏ ஹொயர்மன் எனும் 59 வயது ஆடவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் இருந்து கிழக்கே கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கில்கோ கடற்கரையில் மொத்தம் 11 சடலங்களின் எஞ்சிய உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2010, 2011ஆம் ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்ட அவை முறையே 9 பெண்கள், ஓர் ஆடவர், ஒரு பெண் குழந்தையின் சடலங்கள்.

கொடூரமான அந்தக் கொலைச் சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

கில்கோ கடற்கரையில் இருந்து காரில் பயணம் செய்தால் 20 நிமிடங்களில் அடையக்கூடிய வட்டாரத்தில் ஹொயர்மன் வசித்ததாகக் கூறப்பட்டது.

கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட அவரிடம் நாலாவதாக ஒரு பெண்ணைக் கொலை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் விசாரணை தொடர்கிறது.

அவர் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண்கள் பாலியல் சேவை வழங்குவதாக விளம்பரம் செய்தவர்கள்.

கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தகவலறிந்தால் தெரிவிக்கும்படி பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்