வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் தற்காலிக தேசிய இணையப் பாதுகாப்பு இயக்குநர், தனிப்பட்ட கடன் விவகாரத்தால் நிரந்தரப் பொறுப்புக்குப் பரிசீலிக்கப்பட மாட்டார் என்பது குறித்து சில வாரங்களுக்கு முன்பு அவரிடம் தெரியப்படுத்தப்பட்டதாக இந்த விவகாரம் பற்றி அறிந்த ஒருவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி நடுப்பகுதியிலிருந்து தற்காலிக இயக்குநராக இருந்து வந்துள்ள திருவாட்டி கெம்பா வால்டனுக்கு ஜனநாயக, குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் முன்னாள் தேசிய இணையப் பாதுகாப்பு இயக்குநர் கிறிஸ் இங்கிலிசிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் தேசிய இணையப் பாதுகாப்பு உத்தியையும் அதைச் செயல்படுத்தும் திட்டத்தையும் திருவாட்டி வால்டன் மேற்பார்வையிட்டுள்ளார்.
தேசிய இணையப் பாதுகாப்பு இயக்குநர் அலுவலகத்தை மேற்பார்வையிடுவதில் திருவாட்டி வால்டன் வலுவான தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் எமிலி சைமன்ஸ் குறிப்பிட்டார்.

