டெல் அவிவ்: இஸ்ரேலின் ஆளும் கூட்டணி முன்னெடுத்துள்ள சீர்திருத்தங்களை எதிர்த்துப் போராட டெல் அவிவ் நகரின் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை திரண்டனர்.
நீதித்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் ஜனநாயகத்துக்கு மிரட்டலாக விளங்குவதாக அவர்கள் கருதுகின்றனர்.
இவ்வாண்டு ஜனவரியில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, 28வது முறையாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடும் எதிர்ப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்தச் சீர்திருத்தங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், கடந்த மாதம் அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

