பிரிட்டனின் ஆக விலையுயர்ந்த காற்பந்து வீரர் டெக்லன் ரைஸ்

பிரிட்டனின் ஆக விலையுயர்ந்த காற்பந்து வீரர் டெக்லன் ரைஸ்

1 mins read
c88ce544-4918-4b09-b30c-dd9d9da98dd5
ஆர்சனலுக்கு மாறும் டெக்லன் ரைஸ். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) வெஸ்ட் ஹேம் காற்பந்துக் குழுவுக்காக விளையாடி வந்த டெக்லன் ரைஸ், சனிக்கிழமை பிரிட்டனின் ஆக விலையுயர்ந்த ஆட்டக்காரரானார். வெஸ்ட் ஹேம் குழுவிடமிருந்து அவரை £105 மில்லியனுக்கு (S$181.6 மி.) ஆர்சனல் வாங்கியது.

2021ல் ஆஸ்டன் வில்லாவிடமிருந்து ஜேக் கிரிலிஷ் எனும் ஆட்டக்காரரை வாங்க மான்செஸ்டர் சிட்டி செலுத்திய £100 மில்லியன் கட்டணத்தையும் இது விஞ்சிவிட்டது. அடுத்த பருவத்தில் இபிஎல் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் இருக்கும் ஆர்சனல், திறன்மிக்க ஆட்டக்காரர்களை வாங்க தாராளமாக செலவு செய்து வருகிறது.

இந்நிலையில், வெஸ்ட் ஹேம் ஆதரவாளர்களுக்கு 24 வயது ரைஸ் எழுதிய கடிதத்தில், ஆக உயரிய நிலையில் விளையாடுவதற்கான ஆர்வம் தமக்கு இருப்பதால் ஆர்சனலில் சேர தாம் முடிவெடுத்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்