சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் நட்புமுறை காற்பந்து ஆட்டங்களில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து நட்சத்திரங்கள் களமிறங்குகின்றனர்.
சிங்கப்பூர் ஃபெஸ்டிவல் ஆஃப் ஃபுட்பால் டிரிவனை முன்னிட்டு களமிறங்கும் ஸ்பர்சின் 31 ஆட்டக்காரர்கள் கொண்ட குழுவில் அக்குழுவின் ஹேரி கேனும் சொன் ஹியூங் மின்னும் இடம்பெறுகின்றனர்.
லிவர்பூலும் இந்த நட்புமுறை ஆட்டங்களில் விளையாடுகிறது. அக்குழுவைச் சேர்ந்த 32 ஆட்டக்காரர்கள் சிங்கப்பூர் வருகின்றனர்.
அவர்களில் நட்சத்திர வீரர் முகம்மது சாலாவும் ஒருவர்.
லிவர்பூலில் புதிதாக இணைந்திருக்கும் டோமினிக் சோபோஸ்லாயையும் அகெக்சிஸ் மெக் ஆலிஸ்டரையும் ரசிகர்கள் காணலாம்.
இம்மாதம் 26ஆம் தேதியன்று லயன் சிட்டி செய்லர்ஸ் குழுவுடனான நட்புமுறை ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு களமிறங்குகிறது. இந்த ஆட்டம் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இம்மாதம் 25ஆம் தேதியன்று ஸ்பர்ஸ் சிங்கப்பூரில் பயிற்சி மேற்கொள்கிறது. அதை ரசிகர்கள் நேரில் கண்டு மகிழலாம்.
சிங்கப்பூர் ஃபெஸ்டிவல் ஆஃப் ஃபுட்பால் டிரிவனுக்கான நுழைவுச்சீட்டுகளை https://premier.ticketek.com.sg/shows/show.aspx?sh=SFFUM எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று வாங்கலாம்.


