ஆக்லாந்து: பெண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டத்தில், போட்டிகளை ஏற்று நடத்தும் நாடுகளுள் ஒன்றான நியூசிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் நார்வேயைத் தோற்கடித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தர வரிசையில் 26வது இடத்தில் உள்ள நியூசிலாந்து, தர வரிசையில் 12வது இடத்தில் உள்ள நார்வேயை வென்று அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
பிற்பாதி ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் ஜாக்கி ஹான்ட் கொடுத்த பந்தை கோலாக்கினார் ஹன்னா வில்கின்சன். இது அவரது மூன்றாவது உலகக் கிண்ண கோலாகும்.
90வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நியூசிலாந்தின் ரியா பெர்சிவல் கோலாக்கியிருக்க முடியும். ஆனால் அவர் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
‘ஏ’ பிரிவில் நியூசிலாந்து அடுத்து பிலிப்பீன்சையும் சுவிட்சர்லாந்தையும் சந்திக்கும்.