ரஷ்ய போர் ஆயுதங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இலக்கு

ரஷ்ய போர் ஆயுதங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இலக்கு

1 mins read
08d4f863-a10b-4bca-a1de-0f99bb7b22b4
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுறா தாக்குதல்களின் ஒரு பகுதியாக அண்மைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டனில் உள்ள ரஷ்யத் தூதரகம் குறிப்பிட்டது. - படம்: இபிஏ

வாஷிங்டன்: உக்ரேன் போரில் மின்னணுவியல், இதர பொருள்கள் ரஷ்யாவுக்குக் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், கிட்டத்தட்ட 120 பேருக்கும் அமைப்புகளுக்கும் எதிராக அமெரிக்கா வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமெரிக்க நிதி, வெளியுறவு அமைச்சுகள் அறிவித்துள்ளன.

“உலோகங்கள் சுரங்கத் துறையிலிருந்து ரஷ்யாவுக்கு கிடைக்கும் வருவாயையும் எதிர்கால எரிசக்தி ஆற்றலையும் குறைக்கும் விதத்தில் இந்த நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன,” என்று நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்டது.

“ரஷ்யாவின் ராணுவ ஆற்றல், போர் ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதில் இன்றைய செயல்கள் மற்றொரு முக்கிய படி,” என்று துணை நிதி அமைச்சர் வாலி அடியிமோ வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுறா தாக்குதல்களின் ஒரு பகுதியாக அண்மைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டனில் உள்ள ரஷ்யத் தூதரகம் குறிப்பிட்டது.

இந்நிலையில், போருக்கு செலவிடுவதில் கட்டுப்பாடு விதிக்க உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தமது அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்